சஜித் பிரேமதாசவின் மனைவி அரசியலுக்கு வருவாரா? – சஜித் பிரேமதாசவின் கருத்து

சஜித் பிரேமதாசவின் மனைவி, திருமதி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

தனது குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி அரசியலுக்கு வருவதாக வெளியான தகவலை மறுப்பதாகவும், தனது மனைவி அரசியலுக்கு வருவது குறித்த சிந்தனை அவரிடம் இல்லை என மேலும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிடுகையில், அவர் ஒரு தீவிரமான சமூக ஆர்வலராக மட்டுமே பணியாற்றுகிறார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.