ரயில் விபத்து நடந்த இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி.

விபத்து நடந்த இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். அவர் உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அந்த இடத்தில் இருந்து கேபினட் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சருடன் பிரதமர் பேசினார். காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

உயிரிழந்த குடும்பங்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.