இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரணில் இரங்கல்!

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்தத் தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக விபத்துக்கு முகம் கொடுத்துள்ள இந்திய அரசுக்கு வலிமையும் தைரியமும் கிட்ட வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் விசேட செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.