சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில்…பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை பல்கலைக்கழகம்!

உயர்கல்வி நிறுவனங்களின் இந்திய தரவரிசை பட்டியலை மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் நேற்று வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியலில், தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் 4 பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு காட்டிலும் இந்தாண்டு முன்னேற்றம் கண்டுள்ளன. ஐந்து பல்கலைக்கழகங்கள் கடந்தாண்டை ஒப்பிடுகையில் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

புகழ்வாய்ந்த சென்னை பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 50வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகம் 20வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 100 பல்கலைக்கழகங்கள் வரிசையில் 14வது இடத்தை பிடித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு தரவரிசையில் 63 வது இடத்தில் இருந்து முதல் 100 பல்கலைக்கழகங்கள் வரிசையில் இந்த ஆண்டு 59 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு தரவரிசையில் இல்லாத தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 72 ஆவது இடத்தை பிடித்துள்ளது

பின் தங்கிய பல்கலைக்கழகங்கள்

பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு முதல் 100 பல்கலைக்கழகங்கள் வரிசையில் 15 வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 21 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று அழகப்பா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 28 வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 30 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 39 வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 50வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 52 வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 53 வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 80வது இடத்திலிருந்து இந்த ஆண்டு 83 வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.