இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 34 பேர் கைது!

விசா காலாவதியாகி இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று வியாழக்கிழமை சீதுவை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த பல புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் 19 முதல் 54 வயதுக்குட்பட்ட ஆண்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையின் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பங்களாதேஷ் பிரஜைகளை விரைவில் அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.