போதைப்பொருட்களுடன் 405 பேர் சிக்கினர்!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 405 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 99 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன், 221 பேர் ஐஸ் போதைப்பொருளுடன், 85 பேர் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.