ஹைதராபாத்தில் 11-ம் வகுப்பு மாணவி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை!

ஹைதராபாத்தில் தனியார்ப் பள்ளியில் படித்துவந்த 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிஜாம்பெட்டின் பச்சுபள்ளி பகுதியில் உள்ள நாராயண ஜூனியர் கல்லூரியில் இந்த சம்பவம் நடைபெற்றது. கமரேட்டி நகரத்தைச் சேர்ந்த மாணவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் 11-வகுப்பில் சேர்ந்து, கல்லூரி விடுதியில் தங்கி வந்தார்.

இந்நிலையில், திடீரென விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மாணவியின் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாணவி எதற்காக குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.