நாமலோடு இருப்போர் போனாலும் ஆட்சி கவிழாது, அரசும் கலைக்கப்படாது – நிமல் லான்சா

நாமல் ராஜபக்ஷவும் ராஜபக்ஷவும் , அவரது ஆதரவாளர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அரசாங்கம் கவிழாது எனவே அரசாங்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கத் தயார்! என்ற தலைப்பில் இன்று (14) ‘த லீடர்’ பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வெளிநாட்டில் உள்ள லன்சா எம்.பி. இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி எம்.பி.க்களை முதன்முறையாக சந்தித்த போது, ​​பாராளுமன்றத்தை கலைப்பீர்களா என மொட்டு எம்.பிக்கள் , ஜனாதிபதியிடம் வினவிய போது , இல்லை , ஆனால் நீங்கள் கூறும்போது அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைப்பேன் என்றார்.

எனவே அமைச்சரவையில் அமைச்சர்கள் பதவி கேட்டு விவகாரப்படுவதால் , தற்போதைக்கு அரசாங்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த எம்.பி., நாமல் ராஜபக்ஷ குழுவிற்கு தற்போது மொட்டுவில் உள்ள 25 எம்.பி.க்களுக்கு மேல் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவாதிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் பிரச்சினை இல்லை. ஏனெனில் அவர்கள் சென்றால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அதிகமான எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகளிலிருந்து அரசாங்கத்துக்கு வரக் காத்திருக்கும் எம்.பி.க்களுக்கு உள்ள ஒரே தடை பசில் குழுதான் ..’’ என்றார் லான்சா எம்.பி.

“கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் நாட்டை கட்டியெழுப்ப வரும்போது மறைந்திருந்தவர்கள், தற்போது ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். இவை தெளிவாக பாசாங்குத்தனமான வேலைகள். எல்லோரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் ஜனாதிபதியின் காலை இழுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இலங்கைக்கு வந்தவுடன் இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவேன் என நிமல் லான்சா எம்.பி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.