அசாம் வெள்ளம்: 5 லட்சம் பேர் பாதிப்பு; காய்கறிகள் விலை கடும் உயர்வு!

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

10 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜாலி, நல்பாரி, பர்பீட்டா, தம்லூர், பக்சா, கோஹல்பாரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 4.89 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

16 மாவட்டங்களில் 54 பஞ்சாயத்துகளுக்குட்பட்ட 1, 538 கிராமங்களிலுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாயகட்டத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலுமாக முடகியுள்ளன. இதனால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தாழ்வான இடங்களிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுவரை 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண பொருள்களை விநியோகம் செய்ய 75 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.