ஓராண்டில் 70 ஶ்ரீலங்கன் விமானிகள் சேவையில் இருந்து வெளியேறியுள்ளனர் …. இன்னும் சிலர் வெளியேற உள்ளனர்!

போதிய சம்பளம் இல்லாத காரணத்தால், ஒரு வருடத்தில் 70க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிகள் வேலையை விட்டு விலகியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகள் அறிவித்துள்ளனர்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விமானிகளின் பற்றாக்குறை தொடர்பில் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தியிருந்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 470 மூலம் தென்கொரியா செல்லவிருந்த இலங்கை பணியாளர்கள் செல்லவிருந்த விமானம் தாமதமானமையானதால் , அவர்களது தொழிலை இழக்க நேரிடலாம் என தொழிலாளர் அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கடுமையான குற்றச்சாட்டு தொடர்பில் விமானிகள் தற்போதைய நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதிய சம்பளம் வழங்காத காரணத்தினால் கடந்த ஒரு வருடத்தில் 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையை விட்டு விலகியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகள் அந்த அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தவிர மற்றொரு குழு வெளியேற தயாராகி வருவதாகவும் விமானிகள் மேலும் தெரிவித்தனர்.

330 விமானிகள் விமான சேவையில் இருக்க வேண்டியிருந்தாலும், விமான நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால், தற்போது 250 விமானிகள் மட்டுமே சேவையில் உள்ளனர் என அவர்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.