பிரான்ஸில் வெடித்தது கலவரம் – நாடளாவிய ரீதியில் 421 பேர் கைது!

பிரான்ஸில் வெடித்த கலவரத்தை அடுத்து நாடு முழுவதும் குறைந்தது 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று Le Figaro செய்தி வெளியிட்டுள்ளது.

அவற்றில் 242 சுற்றிவளைப்பு பாரிஸ் பிராந்தியத்தில் நடந்ததாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆபிரிக்க வம்சாவளி சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் பொலிஸாருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைதியை நிலைநாட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை

ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், “இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.