வாலிப கிண்ணம் தொடர் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அல்வாய் இளைஞர் அணி ….

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கம் தனது 10 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தி வருகின்ற மாபெரும் 48 அணிகள் பங்கேற்கின்றன துடுப்பாட்ட போட்டியில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மல்லாகம் ஸ்டார் அணியை எதிர்த்து அல்வாய் இளைஞர் அணி மோதியது .

முதலில் துடுப்பெடுத்தாடிய அல்வாய் இளைஞர் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 06 பந்து பரிமாற்றத்தில் 05 இலக்குகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றது .
துடுப்பாட்டதில் அணித்தலைவர் கமல் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் நிகாசன் 19 , சாது 14 , கபில் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுஜீபன் 2 இலக்குகளையும், சஞ்சி,பிரசன்னா 1 இலக்கை வீழ்த்தினர்.

பதிலுக்கு 73 ஓட்டங்களை பெற்றால் வெற்றி பெற முடியும் என துடுப்பெடுத்தாடிய மல்லாகம் ஸ்டார் அணி கீதன் , டிலக்சன் சிறந்த பந்துவீச்சுக்கு ஈடுசெய்ய முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 06 பந்துபரிமாற்றத்தில் 07 இலக்குகளை இழந்து 42 ஓட்டங்களை பெற்று 30 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது .
இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அல்வாய் இளைஞர் அணி..

துடுப்பாட்டதில் ரிஷாந் 18 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் கீதன் 03 இலக்குகளையும் டிலக்சன் 02 இலக்குகளையு‌ம் மற்றும் பிரசாந், சாது ஒவ்வொரு இலக்கினை வீழ்த்தினர்.

மாபெரும் துடுப்பாட்ட இறுதி போட்டியில்
அளவெட்டி மத்தி அணியுடன் மோதவுள்ளது ..

Leave A Reply

Your email address will not be published.