ஈஸ்டர் தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரி, ரணில் தப்பவே முடியாது!- ஆணைக்குழு விசாரணையின் பின் ராஜித தெரிவிப்பு 

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தப்பவே முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் மீண்டும் மூன்றரை மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.

இந்த ஆணைக்குழு முன்பாக ராஜித இன்று காலை 9.30 மணியளவில் ஆஜராகினார். தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், பிற்பகல் ஒரு மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து அவர் வெளியேறினார்.

இதன்பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தத் தாக்குதல்கள் குறித்த முன் அறிவிப்புகள் கிடைத்திருப்பதை என்னால் உறுதிசெய்ய முடியும்.

அதேபோல் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தப் பொறுப்பிலிருந்து நழுவிச் செல்ல முடியாது” என்று கூறினார்.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.