மட்டக்களப்பு அரச ஹோமியோபதி வைத்திய நிலையத்தில் நான்கு மாதங்களாக மருந்துகள் வழங்கப்படவில்லை

மட்டக்களப்பு நகரத்தில் இயங்கி வரும் அரச ஹோமியோபதி வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மருந்துகள் வழங்கப்படாததையிட்டு நோயாளர்களால் இன்று (11) குறித்த வைத்திய நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2019 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோமியோபதி வைத்திய நிலையத்தில் ஆங்கில மற்றும் ஏனைய மருத்துவ முறைகளில் நோய் குணமடையாத நேயாளர்கள் இவ்வைத்திய முறையில் குணம்கிடைக்கின்றது என்ற நம்பிக்கையில் நாள்தோறும் 40 தொடக்கம் 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று, நான்கு மாதங்களாக மருந்துகள் வளங்கப்படவில்லை எனவும், வைத்தியர் மருந்து வரவில்லை நான் என்ன செய்வது என கூறுவதாகவும், மருந்து இல்லை என போட்டு போட்டுள்ளதாகவும், இவ்வைத்தியசாலையில் வேறு வசதிகளும் இல்லைஎனவும், இம்மருந்து வகைகளை வேறு எந்த மருந்தககங்களிலும் பெற்றுக் கொள்ள முடியாததினாலும் பொறுமை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வைத்திய நிலையத்திற்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி எம்.ஏ.எம். முனீர் கருத்து வெளியிடுகையில் இலங்கை மருத்துவ சபையின்கீழ் இயங்கிவரும் இவ்வைத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றரை வருட காலத்தில் சுமார் ஐயாயிரம் நோயாளர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சை பயணளிக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையில் நாளாந்தம் 40 தொடக்கம் 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும், இவ்வைத்திய நிலையம் ஆரம்பிக்கும்போதே 20வீதமான மருந்துகளுடன்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், மருந்து பற்றாக்குறை தொடர்பாக இலங்கை மருத்து சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், சபை அமைச்சுக்கு அறிவித்திருப்பதாகவும், இவ்வகை மருந்துகள் வரவில்லை அவை கிடைக்கப் பெற்றதும் வழங்கப்படுவதாக அமைச்சும், மருத்துவ சபையும் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஒரு வைத்தியரும் ஒரு மருந்து வழங்குனர் உட்பட இருவர் மாத்திரம் அலுவலக தளபாட வசதிகளுமற்ற நிலையில் மாநகர சபையின் தளபாடங்களுடன் இவ் வைத்திய சிகிச்சை நிலையம் இயங்கி வருகின்றது. புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர் சிசிரஜயகொடி ஹோமியோபதி வைத்திய முறைமையினை மேம்படுத்தி வருகின்றார். அவர் இவ்வைத்திய முறையினை முன்னிலைப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.