விற்பதற்காகக் கழுவிக் காயவைக்கப்பட்ட 3 ஆயிரத்து 128 முகக்கவசங்கள் சிக்கின!

கொழும்பு, கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மீண்டும் பயன்படுத்த முடியாத 3 ஆயிரத்து 128 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புறக்கோட்டைப் பொலிஸாருடன் அந்த இடத்தைச் சுற்றிவளைத்தபோது அங்கு ஆயிரக்கணக்கான நீலம், வெள்ளை மற்றும் KN 95 ரக முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்தன என்று கோட்டை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.பீ.லால் தெரிவித்தார்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், மழையில் நனைந்த காரணத்தால் முகக் கசவங்கக் இவ்வாறு உலர வைக்கப்பட்டன என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், சந்தேகத்தின் பேரில் புறக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் உரிமையாளர் மற்றும் முகக்கவசங்கள் தொகை சுகாதார அதிகாரி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

முகக்கவச தொகை மற்றும் அதன் உரிமையாளர் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.பீ.லால் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.