அமெரிக்க டொலரை கைவிட்டு , இந்திய ரூபாய்க்கு மாறவுள்ள இலங்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) புதுடெல்லிக்கு விஜயம் செய்யும் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை (21) இந்திய அதிகாரிகளுடன் கைச்சாத்திடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக நியமிப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இந்திய ரூபாயுடனான பரிவர்த்தனைகள் – RuPay அட்டை மற்றும் RuPay பொறிமுறை – இந்தியாவால் ஊக்குவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று (20) பிற்பகல் புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.