மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்- முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 288/4.

இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார். அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 (161), ரோகித் சர்மா 80 (143) ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து, யாஷவி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும், கில் 10 ரன்களும், ராஹானே 8 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்டியின், முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.