ரோஜாவின் மகள் சின்ன ரோஜா ஆவாரா?

ஆந்திர மாநில நகரி தொகுதியின் எம்.எல்.ஏ வாகவும்,முன்னாள் நடிகையுமான ரோஜாவின் மகள் அன்ஷூமாலிகா நடிக்க வருவாரா என்ற கேள்வி அவரது 17  பிறந்த நாள் கொண்ட்டாத்தில் எடுத்த போட்டோக்களால் எழுந்து உள்ளது.

இயக்குனர் செல்வமணி,ரோஜா வின் மகளான அன்ஷீமாலிகாவின் போட்டோக்களை ரோஜா தனது வலைத் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகினைப் புகழ்ந்து,அவரும் நடிக்க சினிமாவிற்கு வருவாரா என வினா எழுப்பியுள்ளனர்.

தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் கொடிக்கட்டிப் பறந்த ரோஜா, தன் மகள் நடிக்க அனுமதி அளித்தார் என்றால்,பெரிய பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பினை பெறுவது உறுதி என்று,கோலிவுட், டோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.