நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.

நடிகர் அஜித் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியில் திங்கட்கிழமை அன்று (ஏப்ரல் 28) அதிபர் திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
டெல்லியில் பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் குமார் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்களால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அஜித் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.