இலங்கை ராப் பாடகர் ஹீரோவாக, ஜனனி ஹீரோயினாக நடிக்கும் புதிய காதல் காவியம்!

“Finder” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய காதல் திரைப்படம் “மைனர்”. அரபி புரொடக்ஷன், வையன் வென்ச்சர்ஸ் மற்றும் மேடே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று படக்குழுவினர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இன்றைய இளைய தலைமுறையினரின் காதல் எப்படி இருக்கிறது என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. பள்ளிப் பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் மேற்கொள்ளும் பயணமும், அந்தக் காதல் மீண்டும் இணைந்ததா இல்லையா என்பதுமே இப்படத்தின் முக்கிய கதையம்சம்.

இப்படத்தில், இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் வாகீசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிக்பாஸ் புகழ் ஜனனி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், நகைச்சுவை நடிகர் சார்லி மற்றும் சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இலங்கை சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரெஜி செல்வராசா இப்படத்தின் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து / இயக்கம்: வினோத் ராஜேந்திரன்

ஒளிப்பதிவு: ரெஜி செல்வராசா

இசை: சூர்ய பிரசாத் R

படத்தொகுப்பு: அருண் பிரசாத் S

கலை: அசோக் சந்தர்

ஆடை வடிவமைப்பு: பிரியதர்ஷினி

DI: கார்த்திகேஷ்

ஒலி வடிவமைப்பு: சதீஷ் குமார் A

பப்ளிசிட்டி வடிவமைப்பு: ராகவ் Arts

தயாரிப்பு மேற்பார்வை: ஹெட்விஜ் JB சூர்யா

தயாரிப்பு உதவி: நவீன் பிரபு, வினோத் பாபு

மக்கள் தொடர்பு: A. ராஜா

இலங்கை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.