தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பலி- 100 பேர் படுகாயம்.

தாய்லாந்தில் தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

பணியின்போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்ட பிழை காரணமாக பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாராதிவாட் கவர்னர் சனன் பொங்கக்சோர்ன் கூறுகையில், “சுங்கை கோலோக்கில் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த கிடங்கில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்படி ஒன்பது பேர் இறந்துள்ளனர்.

115 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது தீ கட்டுக்குள் உள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், ஸ்டீல் வெல்டிங் செயல்பாட்டின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே காரணம் என்று முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது” என்றார்.

இதுதொடர்பாக அந்நாட்டின் ஊடகங்களில் வெளியான காட்சிகளில், காற்றில் பெரும் புகை மூட்டம் எழுவதையும், குண்டுவெடிப்பின் எதிரொலியால் ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் மோசமாக சேதமடைந்ததையும் காட்டியது.

Leave A Reply

Your email address will not be published.