அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழில் போராட்டம்!

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.