ரஜினி இடத்தில் ராகவா லாரன்ஸ்.. வெளிவந்த சந்திரமுகி 2 படத்தின் First லுக் போஸ்டர்.

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 திரைப்படத்தை பி. வாசு இயக்கியுள்ளார். ஆனால், இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி உள்ளிட்ட நட்சத்திரங்கன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இன்று சந்திரமுகி 2 படத்தின் First லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் கச்சிதமாக பொருந்தியுள்ளார் என்றும், ரஜினியை போலவே அனைவரையும் திருப்திப்படுத்துவார் என்றும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த போஸ்டருடன் வருகிற விநாயக சதுர்த்தி அன்று சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.