சமந்தா கெட்டப்பில் களமிறங்கிய பிக்பாஸ் ஜனனி.

இலங்கையைச் சேர்ந்த ஜனனி தற்போது ஸ்கூல் கேர்ளாக மாறிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அதன் அஸ்த்திவாராமாக மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார்.

 இந்நிலையில லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து பல அழகான உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஜனனி. தற்போது பள்ளி உடையில் இருக்கும் அழகான புகைப்படத்தைப் பார்த்து இந்த கெட்டப்பில் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.