நடிகர் வடிவேலுவின் சகோதரர் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்!

நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். ராசாவின் மனசிலே தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. இன்று வரை தமிழ் திரைத்துறையின் நகைச்சுவையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது குணச்சித்திர வேடத்தில் இவர் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் வடிவேலுவிற்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள். அத்தோடு தன் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் நன்கு பார்த்துக் கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தவர் வடிவேல் என்று அவருடைய தம்பி ஜெகதீஸ்வரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் அவரது தம்பி ஜெகதீஸ்வரன் காதல் அழிவதில்லை உள்ளிட்ட 3 படங்களில் நடித்திருக்கிறார். பின்பு சிறு சிறு பிரச்சனை காரணமாக நடிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

வடிவேலுவின் இளைய சகோதரரான ஜெகதீஸ்வரன் (55) கடந்த சில நாட்களாகவே கல்லீரல் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மதுரை ஐரவாதநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். இவருக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.