சுகாதார அமைச்சர் கெஹலியவைப் பாதுகாக்க அரசு கடும் பிரயத்தனம்!

செப்டெம்பர் முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ஆளுங்கட்சியினர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களை செப்டெம்பர் 5 ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் ஊடாக இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டெம்பர் 5 முதல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. செப்டெம்பர் 7 அல்லது 8 ஆம் திகதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எனவே, அந்தப் பிரேரணையை தோற்கடிப்பதற்கும், ஆளுங்கட்சியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் ஆளுங்கட்சியினர் கட்டாயம் சபையில் இருக்க வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.