மீண்டும் ED ரெய்டு! செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் சோதனை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

தமிழகத்தில், சென்னை, திருச்சி உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, செந்தில் பாலாஜி குடும்பத்தினருடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருப்பவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், கிடைக்கும் ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு, நேற்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனுதாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுகிய காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதற்கு நீதிபதி அல்லி, வரும் 15 ஆம் திகதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணையை 15 ஆம் திகதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.