சிறுவன் மீது கார் ஏற்றி கொலை… திட்டமிட்டு பழிவாங்கிய உறவினர்…!

கேரளாவில் மனைவி முன்பு தன்னை அவமானப்படுத்திய சிறுவனை, உறவினரே கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளய்து.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிசேகர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். போலீசார் இந்த சம்பவத்தை விபத்து வழக்காக பதிவு செய்த நிலையில் சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விபத்து குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது தான் சிறுவனின் மரணம் குறித்து போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் சாலையின் ஓரம் நின்றுக்கொண்டிருந்த கார், சிறுவன் வந்ததும் அவனை பின் தொடர்ந்து சென்று மோதுகிறது. பின்னர் சத்தம் கேட்டு ஓடி வரும் பொதுமக்கள் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.

இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் , அந்த கார் சிறுவனனின் உறவினரான பிரியரஞ்சன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இது குறித்து பிரியரஞ்சனை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.