இரத்மலானை ரயில்வே ஊழியரது கொலைக்கான காரணம் வெளியானது!

இரத்மலானை, பகுதியிலுள்ள ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் , இலங்கை புகையிரத தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் பிரதான இயந்திர பொறியியல் உப திணைக்களத்தின் கிளை அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரும் குற்றவாளியும் சிறந்த நண்பர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவருக்கும் அவரது நெருங்கிய நண்பரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தவறான உறவு காரணமாகவே இக் கொலை நடந்துள்ளது.

இவர்கள் இருவரும் ரயில்வே துறையில் கார்ப்பரேஷன் டெக்னீசியனாக பணியாற்றி வந்ததுள்ளனர்.

மாத்தறை, தியகஹ பகுதியைச் சேர்ந்த கே.இந்திக்க ஹேமந்த என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் ரயில்வே வீட்டுத் தொகுதியில் உள்ள இலங்கை ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்க அலுவலகத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (12ஆம் திகதி) பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், கொலைசெய்யப்பட்ட நபருக்கு கத்தியால் குத்தியவரின் மனைவியுடன் , கொலையானவர் கள்ள தொடர்பில் இருந்து வந்ததமை தெரியவந்துள்ளது.

வீட்டிற்குள் மனைவியும், அவரது நண்பரும் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் , கொலை செய்த ரயில்வே ஊழியர் மனைவியின் தந்தையை அந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

கதவை தட்டிய போதும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அதை உடைத்து உள்ளே நுழைந்த ரயில்வே ஊழியர், தனது நண்பரை நாற்காலியால் தாக்கிவிட்டு, பின்னர் கத்தியால் நெஞ்சுப் பகுதியில் இரண்டு முறை குத்தியுள்ளார்.

பின்னர் அந்த இடத்தில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயமடைந்த நபரை அம்புலன்ஸ் மூலம் தென் கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கும் போதே , அவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் , கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.