கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து 6 நாட்களில் 6 எலும்புக்கூடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் , கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குப் பின்னர் ஆறு பேரின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 12ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்கிழமையும் ஒருவரின் எலும்புக் கூடு ஒன்று கிடைத்ததாக , சடலங்களை மீட்கும் பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“இன்று முழு மனித உடல் ஒன்று தோண்டப்பட்ட இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. நேற்றைய அகழ்வாராய்ச்சியில் எஞ்சியிருந்த பாகங்களும் எடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வாராய்ச்சியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கழிவு நீரை சுத்திகரிக்கும் கருவி ஒன்றும் கிடைத்தது.”

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிப்பட்ட பாரிய புதைகுழிகளை தோண்டும் பணி நீதிமன்ற உத்தரவின் பேரில் செப்டம்பர் 6 ஆம் திகதி காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக ஜூன் 29 ஆம் திகதி மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.