நூற்றுக்குமேற்பட்ட மாணவர்களோடு சிறப்பு நிறைவுபெற்றது, 1வது வழிகாட்டல் கருத்தரங்கு!

இளவாலை. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘அரும்பு’ கல்விச் செயற்திட்டத்தின்கீழ், தரம்-5 புலமை பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கான 1வது வழிகாட்டல் கருத்தரங்கு இளவாலை றோ.க.த பாடசாலையில் யாழின் பிரபல புலமை ஆசிரியர் திரு.வதன் அவர்களை வளவாளராக கொண்டு் கடந்த சனிக்கிழமை நிறைவு பெற்றது!

தரம்-5 மாணவர்களுக்கான 2வது கருத்தரங்கு பிரபல ஆசிரியர் திரு.காலமோகன் அவர்களை வளவாளராக கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24-09-2023) இளவாலை றோ.க.த பாடசாலையில் நடைபெற உள்ளது!

இக்கருத்தரங்கிற்கு பரீட்சைக்கு தோற்ற இருக்கும் எந்த ஒரு மாணவரும் இலவசமாக கலந்து பயனடையமுடியும்!

Leave A Reply

Your email address will not be published.