அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைக் குறைந்த லிலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒரு கிலோ சோயா மீட் 45 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.

* ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 290 ரூபாவாகும்.

* ஒரு கிலோ நெத்தலிக் கருவாடு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,100 ரூபாவாகும்.

* ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 620 ரூபாவாகும்.

* ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

* ஒரு கிலோ சிவப்பு பருப்பு 6 ரூபாவாழ் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

இந்தக் விலைக் குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.