முதல் ஒருநாள் போட்டி. இந்திய அணி வெற்றி.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர்.

ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே.எல்.ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் பேசியதாவது: நான் கேப்டனாக இருப்பது இது முதல் முறை கிடையாது. யாரேனும் இல்லை என்றால் இந்த பொறுப்பு என்னை தேடி வந்துவிடும். இதற்கு நான் பழகிக் கொண்டு விட்டேன். இந்த பொறுப்பும் எனக்கு பிடித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் காட்டிய உத்வேகம் மிகவும் சிறப்பானது. எங்கள் அணியில் இன்று 5 பந்துவீச்சாளர்கள் தான் இருந்தார்கள். அதனால் அனைவருமே 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது கில் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். எனினும் கில் ஆட்டம் இழந்த பிறகு போட்டியில் நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம்.

ஏனென்றால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் ஆட்டம் இழந்தால் எப்போதுமே பின்னால் வருபவர்களுக்கு சிக்கல்தான். நானும் சூரியகுமாரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்அமைத்தோம். ஒரு வீரராக இது போன்ற கடின சவால்களை சந்திக்க ஆசைப்படுகிறேன். அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. போட்டியை கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும் என நானும் சூரியகுமாரும் பேசி வைத்து விளையாடினோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.