உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்து!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதமரும், இராஜாங்க, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. .

இந்த அமைச்சு ஆலோசனைக் குழுவில் ஜனக வக்கும்புர, அசோக பிரியந்த, எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், திணைக்கள அதிகாரிகள் உட்பட இராஜாங்க அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.