2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைத்துவம்‌ தொடர்பில்‌ கடந்த சில நாட்களுக்கு முன்னர்‌ சர்ச்சைகள்‌ ஏற்பட்டிருந்த நிலையில்‌, தசுன்‌ சானக்கவே உலக கிண்ணத்‌ தொடரிலும்‌, தலைவராக செயற்படுவதோடு, அவரின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்‌ கொண்ட குழாமில்‌,

குசல்‌ மெண்டிஸ்‌, பெத்தும்‌ நிஸ்ஸங்க, குஷல்‌ ஜனித்‌ பெரேரா, திமுத்‌ கருணாரட்ன, சரித்‌ அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துனித்‌ வெல்லாலகே, கசுன்‌ ராஜித்த, மகீஸ பத்திரன, லஹிரு குமார ஆகியோர்‌ இணைத்துக்‌கொள்ளப்பட்டுள்ளனர்‌.
அத்துடன்‌, வனிந்து ஹசரங்க, மஹீஸ்‌ தீக்ஸன, தில்ஷான்‌ மதுசங்க ஆகியோரது உடற்தகுதியின்‌ அடிப்படையில்‌ அவர்கள்‌ இணைத்துக்‌ கொள்ளப்படுவார்கள்.

இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை குழாமின் விபரங்களுக்கமைய, அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே, சஹன் ஆரச்சிகே ஆகியோர் சகலதுறை வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மதீஷ பத்திரண, கசுன் ராஜித, ப்ரமோத் மதுஷான், பினுர பெர்னாண்டோ ஆகியோர் பந்துவீச்சாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் 2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச்செல்லவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.