யாழ் சாவகச்சேரி விபத்தில்குடும்பஸ்தர் பலி!

சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் நேற்று (1) இரவு நிகழ்ந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு மணியளவில், சாவகச்சேரி, நுணாவில், அமிர்தகழி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் விபத்து நிகழ்ந்தது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஒருவரை பார்க்க வந்த வேளையில் இவர் விபத்தில் சிக்கியுள்ளார்.நுணாவில் பகுதியில் விடுதி நடத்தும், பரமனாதன் ஜோதீஸ்வரன் (41) என்பவரே உயிரிழந்தார்.

அவர் தம்பலாகமம், பளை பகுதியை சேர்ந்தவர்.சாவகச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், எதிரே வந்த பிக்அப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.