பஸ் மீது மரம் விழுந்து, 17 பேர் மருத்துவமனையில்.. ஐவர் பலி..

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் , இபோசவுக்கு சொந்தமான பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று விழுந்துள்ளது.

இந்த விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பஸ் கொழும்பு – மத்துகம பஸ்ஸாகும்.

இந்த பஸ் விபத்து காரணமாக, டுப்ளிகேசன் பாதையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் சிக்கிய இருவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.