மணல் டிப்பர் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் சாவு!

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல் – பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் இடம்பெற்றுள்ளது என்று பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (09) இரவு குறித்த கான்ஸ்டபிள் நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த வேளை, வீதியில் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்து கொண்டிருந்த போது, கந்தளேயிலிருந்து கடுவலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வீதியோரத்தில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

அவர் உடனடியாகப் பொல்கஹவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (10) அதிகாலை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தின் சந்தேகநபரான டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.