போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இறக்குமதி செய்த மருந்துகளின் நிலை?

பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்கு இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்தை வழங்கிய சப்ளையர், வேறு பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து புற்றுநோய் மருந்தையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , அந்த மருந்துகளை பாவனையிலிருந்து நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து மாத்தறை வைத்தியசாலையில் போலி மருந்து என இனங்காணப்பட்டதையடுத்து பாவனையிலிருந்து நீக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த உள்ளூர் சப்ளையர் நிறுவனமான Isolez Biotech Pharma Ag Ltd மூலம் வேறு மருந்துகளையும் கொண்டுவரவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக டாக்டர் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.