தொலைபேசி கட்சி யாருடையது? SJBக்கு சிக்கலா?

இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே ஒரு பிரிட்டிஷ் குடிமகள் என்ற காரணம் உறுதியானமையால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன் மூலம் கட்சிப் பதிவுகள் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

SJB திருமதி டயானா கமகேக்கு சொந்தமானது என்று பலர் கருத்து வெளியிட்டனர்.

இது தொடர்பில் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்து வெளியிட்டார்.

SJB கட்சி மறைந்த மங்கள சமரவீரவினால் பதிவு செய்யப்பட்டதாக அங்கு அவர் தெரிவித்தார்.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரபாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து காரணமாக சில தவறான வழிகாட்டுதல்கள் ஏற்பட்டுள்ளதாக எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.

பிப்ரவரி 2020 முதல், ரஞ்சித் மத்தும பண்டார, SJB கட்சி செயலாளராக இருப்பதாகவும் , தலைவராக திரு.சஜித் பிரேமதாச செயற்படுவவதாகவும் , 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்ட போது ரஞ்சித் மத்தும பண்டார வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக எரான் விக்கிரமரத்ன மேலும் தெரிவித்தார்.

SJB கட்சி செயலாளர் நாயகத்தின் நியமனத்தை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவித்து, ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனம் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.