பிரபல இராணுவ அதிகாரி பிரசன்ன ரணவக்கவின் பெயரை பாவித்த மேஜர் ஜெனரல் ரணராஜா ரணவக்க கைது.

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்களை ரஷ்யக் கூலி படைக்கு அனுப்பியமைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கூறி குருநாகல் ஏரி வட்டத்தில் நேற்றிரவு (08) கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் தெல்கந்துரே ஆரச்சிலாகே ரணராஜா ரணவக்க , மற்றொர் பிரபல இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் பெயரை பாவித்து , ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரசியாவின் கூலி படைக்கு அனுப்பியுள்ளமை தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்களை ரஷ்ய இராணுவத்திற்கு கூலிப்படையாக ஆட்சேர்ப்பு செய்யும் போது அவர் முதலில் தன்னை மேஜர் ஜெனரல் ரணவக்க என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது, ​​இந்த வீரர்கள் அவரிடம் நீங்கள் மேஜர் ஜெனரல் ரணவக்கவா என கேட்டபோது, ​​ஆம் எனக் கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் ரணவக்கவின் நற்பெயர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முன்னாள் படைவீரர்களில் பெரும்பாலானவர்கள் , ரசிய கடத்தல்காரர்கள் வலையில் சிக்கியுள்ளனர்.

தற்போது, ​​ரஷ்ய கூலிப்படையில் இருந்து தப்பித்து வந்து இந்த மோசடியை அம்பலப்படுத்தும் ஓய்வுபெற்ற இராணுவத்தினர், இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க என்று புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் அளித்துள்ளனர். குருநாகல் வெவ சுற்றுவட்டத்தில் உள்ள வீடொன்றில் அவர் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆட்கடத்தலில் சிக்கிய முன்னாள் படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க போல் காட்டிக் கொள்ளும் நபரை கைது செய்ய அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறினால் கைது செய்யுமாறு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றே (09) அறிவிக்கப்பட்டது.

இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களம், வர்த்தக ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் நீண்ட விசாரணையின் விளைவாக ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ரணவக்க மற்றும் சார்ஜன்ட் மேஜர் ஒருவரும் நேற்று (08) இரவு குருநாகல் ஏரியில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்தி வெளியானது. அந்த நேரத்திலும் இந்த நபர் தன்னை மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவாகவே அவரை அடையாளப் படுத்தியுள்ளார். எனவே மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் பெயரும் பொலிஸ் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இன்று (09) காலை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரையும் இவர் தவறாக வழிநடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தெல்கந்துரே ஆராச்சிலாகே ரணராஜா ரணவக்க என்பவரே கடத்தல்காரர் ஆவார்.

ரஷ்யாவிற்கு கூலிப்படைக்கு இராணுவத்தினரை வழங்கிய குற்றத்திற்காக மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் அனைத்து முக்கிய ஊடகங்களும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

பிரபல இராணுவ அதிகாரியான பிரசன்ன ரணவக்கவை காட்டிக்கொடுத்த இந்த தள இராணுவ மேஜர் ஜெனரலின் மாபியா கும்பல் உட்பட பல்வேறு குழுக்களால் இந்த நாட்டின் ஓய்வுபெற்ற 500 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கூலி படைகளாக ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்படி சென்றோரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட மற்ற குழுக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவர்களில் இராணுவத்தின் உயர் பதவிகளை வகித்தவர்களும் உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சுமார் 150 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அந்த குழு , ஒரு பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் இருந்து கிடைத்த தகவல்கள் வழி தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரணராஜா ரணவக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் நேற்று (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணை தகவல்களின்படி, இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவர் மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரபல இராணுவ அதிகாரியான அவருக்கு இந்த மோசடியில் தொடர்பில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இருவரது பெயரிலும் உள்ள சில பெயர் ஒற்றுமைகளை வைத்து மேஜர் ஜெனரல் ரணராஜா ரணவக்க நடத்திய நாடகமாக தெரிய வந்துள்ளது.

மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஊடகங்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.