மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் நியமனம்

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

மணிப்பூரில் வன்முறை உச்சக் கட்டத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சித்தாா்த் மிருதுள் பெயரை மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கெளல், சஞ்சீவ் கன்னா ஆகியோா் உள்ளடக்கிய உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.

மாநில முதல்வரின் கருத்துகளைப் பெற மத்திய அரசு காத்திருந்ததால், நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. மூன்று மாதங்கள் கடந்த நிலையில், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரங்களின்படி, தலைமை நீதிபதியின் கலந்தாலோசனையோடு நீதிபதி சித்தாா்த் மிருதுளை மணிப்பூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். அவருக்கு எனது வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

Leave A Reply

Your email address will not be published.