திறக்காத கதவுகள்.. வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன் மனைவி

விழுப்புரம் அருகே வளவனூரில் வீட்டில் தணியாக வசித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களான கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர், கே.எம்.ஆர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த இராசன். உமாதேவி இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுடைய மகன் இராஜராஜசோழன பெங்களூரிலும், மகள் பத்மா புதுச்சேரியிலும் திருமணமாகி வசித்து வருகின்றனர். இராசான், உமாதேவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு பால்காரர் வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது.

மேலும் புதுச்சேரியில் வசிக்கும் மகள் பத்மா பெற்றோரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளார் இருவரின் தொலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பத்மா அதே பகுதியில் இவர்களுக்கு சொந்தமான வீட்டில் வாடக்கு குடியிருக்கும் விஜயராணி என்பவருக்கு தொடர்புக்கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து விஜயராணி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார் அப்போது இராசன், உமாதேவி இருவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவுயுடன் தடையங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் விசாரனை மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியாவுல்ஹக் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் கொலைகான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் வளவனூர் பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.