காசா மக்கள் மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்! – யாழில் போராட்டம்.

“காசா மக்கள் மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்; ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்” – எனும் தொனிப்பொருளில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (21) யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காசாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் அரசினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காசா மக்கள் பலியாக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர், சிவில் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.