சுகாதாரப் பாதுகாப்பு உறுதியாகும் வரையில் விமான நிலையங்கள் திறக்கப்படாது

சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதியாகும்
வரையில் விமான நிலையங்கள் திறக்கப்படா!

– சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

“இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்படும் வரையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் திறக்கப்படாது.”

– இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

”இலங்கையில் கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கு சுகாதாரத் தரப்பினர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி நாட்டில் வாழும் 2 கோடியே 20 இலட்சம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டு, அது தொடர்பாக சுகாதாரத் தரப்பினர் ஆலோசனைகளை வழங்கும் வரையில் விமான நிலையங்களைத் திறக்க எதிர்பார்க்கவில்லை” – என்றார்.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு மாத்திரம் இலங்கை வரக் கூடிய வகையில் விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.