கேரளாவில் குண்டு வைத்தது இவர்தான்.. உறுதி செய்தது காவல்துறை

கேரளாவில் வழிபாட்டு கூடத்தில் குண்டு வைத்தது டொமினிக் தான் என்பதை போலீஸ் உறுதி செய்தது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் Kalamassery -ல் உள்ள கூட்டரங்கு மையத்தில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெடிகுண்டு சம்பவத்தின்போது, Jehovah’s Witnesses என்ற கிறித்தவ பிரிவினரைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டார் கலந்து கொண்ட பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பிரார்த்தனை தொடங்கிய சில வினாடித் துளிகளில் முதல் குண்டு வெடித்துள்ளது. இதனால் பீதியடைந்து மக்கள் கூட்டரங்கு மையத்தில் இருந்து வெளியேறும்போது, அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்தித்த கேரள ஏடிஜிபி (சட்டம் & ஒழுங்கு) அஜித்குமார், “வெடி குண்டு சம்பவம் தொடர்பாக கொடகர காவல்நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார். குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட Jehovah’s Witnesses என்ற அதே கிறித்தவ பிரிவினரைச் சார்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் . விசாரணையை தீவிரபடுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கேரள போலீசார் நடத்திய விசாரணையில், கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெடிகுண்டை வைத்தது டொமினிக் மார்டின் தான் என்பதை காவல்துறை உறுதி செய்தது. இதனால் அவரிடம் மேலும் இதுகுறித்து விசாரணயை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.