மகாராஷ்டிர மருந்து ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று(சனிக்கிழமை) காலை 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் காயமடைந்த நிலையில் இதுவரை 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.