உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா வெற்றி.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கான் அணியின் ஒமர்ஷாய் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 97 ரன் எடுத்தார். தென்ஆப்ரிக்கா அணியின் ஜெரால்டு கோயட்ஷி 4 விக்கெட் வீழ்த்தினார்.

245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்கா அணி 47.3 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்ஆப்ரிக்கா அணியின் வான்டர் டூசன் ஆட்டமிழக்காமல் 76 ரன்னும் பெலுக்வாயோ ஆட்டமிழக்காமல் 39 ரன்னும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

Leave A Reply

Your email address will not be published.