தேர்தல் சுதந்திரமாகவும் நீதியானதுமாக நடைபெறுவதே சந்தேகமே

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் நடாத்தப்படுவது சந்தேகமே என கபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் தேர்தல் நடாத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஆலோசனை வழிகாட்டல்களின் கீழ் தேர்தல் நீதியான முறையில் நடாத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டங்களில் பங்கேற்கும் நபர்களின் விபரங்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமற்றது எனவும் அதனை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தகவல்களை வழங்கியவர்கள் தேர்தலின் பின்னர் சில நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடக் கூடும் இதனால் தகவல்களை வெளியிட மக்கள் விரும்ப மாட்டார்கள்.இவ்வாறு தகவல்களை வழங்கியவர்கள் தேர்தலின் பின்னர் சில நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடக் கூடும் இதனால் தகவல்களை வெளியிட மக்கள் விரும்ப மாட்டார்கள்.

கூட்டத்தில் பங்கேற்கும் எண்ணிக்கையை வரையறுப்பதனால் வேட்பாளர்கள் பெருந்தொகை பணத்தை செலவிட்டு கூட்டங்களை ஒழுங்கு செய்யக்கூடிய சாத்தியமில்லை.

தேசிய தலைவர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கும் புலனாய்வுப் பணிகளுக்குமே பாரியளவில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு பல்வேறு விடயங்களில் இந்த தேர்தலை நடாத்துவது குறித்த அரசாங்கத்தின் வழிகாட்டல்கள் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதுடன் அது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் பொறிமுறைமைக்கு பெரும் சவாலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.