மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு அறுவை சிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அறுவை சிகிச்சை மஹிந்த ராஜபக்ஷவின் வலது காலில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு வலது காலின் முழங்கால் மூட்டு நீக்கப்பட்டு புதிய முழங்கால் மூட்டு பொருத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவருக்கு முன்னர் இடது காலிலும் இதேபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் அவரது முழங்கால் மூட்டு நீக்கப்பட்டு புதிய மூட்டு பொருத்துவதற்காகவே செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின்னர் அவர் தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என்றும், கட்சி பாகுபாடு இன்றி அரசியல்வாதிகள் அவரது உடல் நலம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.